குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 09, 2011

புத்தரின் போதனைகள் சில அடிப்படைகள்

=============================================================================
என்னுரை

இந்த‌ப்ப‌திவில் புத்தரின் போதனைகள் ப‌ற்றிய என‌து புரித‌ல் ப‌கிர‌ப்ப‌டுகிற‌து, இந்த‌ப் புரித‌ல் முழுமையான‌து அல்ல‌ என்ப‌த‌னை அறிவேன், எனினும் வாச‌க‌ர்க‌ள் இத‌னை ஒருத‌க‌வ‌லாக, மனம், துன்பம் பற்றிய அரிய விஞ்ஞானமாகிய‌ பௌத்த‌ம் ப‌ற்றிய‌ உய‌ரிய‌ க‌ருத்துக்க‌ளை க‌ற்ப‌த‌ற்கான‌ தூண்ட‌லாக‌ எடுத்துக் கொள்ளுங்க‌ள்.

அன்புட‌ன்
சும‌ன‌ன்
=============================================================================

பௌத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு அகத்தினை ஆராயும் விஞ்ஞானம், வட இந்தியாவில் நேபாள தேசம் என இன்று அழைக்கப்படும் இடத்தில் லும்பினி  பிறந்த அரச குமாரனான சித்தார்த்தன், அவரது காலத்திற்கு பின் அவரது போதனைகளை சீனம், பர்மா, ஜப்பான், இலங்கை என பல கலாச்சாரங்களில் உருவாகி இன்று மேற்குலகிலும் பிரபலமாகிவருகின்றது. புத்தரது போதனைகள் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு மாறுதலடைந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் எது சரி எது பிழை என ஆராயமுடியாத வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அந்தக்கலாச்சார மக்களுக்கு ஏற்றவகையில் சரியானதாகவே காணப்படுகிறது. அனைத்தும் நவீன மனிதனது மனவியல் பிரச்சனைகளுக்கு தீர்வாகவே காணப்படுகிறது. இந்த‌ப் ப‌திவில் பௌத்த‌த்தின் அடிப்ப‌டைக‌ள் என்ன‌ என்ப‌து ப‌ற்றி சுருக்க‌மாக‌ பார்ப்போம்.

அநேக‌மான‌ பௌத்த‌ போத‌னைக‌ள் எதிர்கால‌ க‌ர்மாவினை வ‌ர‌விடாம‌ல் த‌டுத்த‌ல், ந‌ல்ல‌ க‌ர்ம‌ங்க‌ளை அதிக‌ரித்த‌ல், ம‌ன‌தின் செய‌ற்பாடுக‌ளை அறித‌ல், அத‌ன் மூல‌ம் மன‌தினை தூய்மைப்ப‌டுத்துத‌ல், இறுதியாக‌ ஞான‌த்தினை அடைத‌ல், அடைந்த‌ ஞான‌த்தின் மூல‌ம் துன்ப‌முறும் ம‌க்க‌ளுக்கு உத‌வுத‌ல் என்ப‌வ‌ற்றை அடிப்ப‌டையாக‌ கொண்ட‌வை.

பௌத்த‌த்தின் அடிப்படைகள் சில‌,

புத்த‌ர் ஒரு க‌ட‌வுளா?இல்லை, அவ‌ர் உண்மையினை தெளிவாக‌ அறிந்த‌ ஞானி, அவ‌ர் க‌டைப்பிடிப்ப‌த‌ற்காக‌வென‌ எதையும் போதிக்க‌வில்லை, தான் அறிந்த‌ உண்மைக‌ளை ப‌ரிசோதிப்ப‌த‌ற்காக‌ விட்டுச் சென்றுள்ளார். யாரையும் த‌ன்னை பின்ப‌ற்ற‌ச் சொல்ல‌வில்லை. அவ‌ர் கூறிய‌வ‌ற்றை எம‌து அறிவின் மூல‌ம் ப‌ரிசோதித்து தெளிந்த‌வ‌ற்றை எம‌து க‌ருத்தாக‌ ஏற்று ஞான‌த்தினை பெற‌ச்சொல்லியுள்ளார்.

வாழ்க்கையின் இல‌ட்சிய‌ம் என்ன‌?
புத்த‌ரின் க‌ருத்துப்ப‌டி வாழ்க்கையிற்கு ல‌ட்சிய‌ம் என்று ஒன்று இருப்ப‌தாக‌ கூற‌வில்லை, ஆனால் எல்லா உயிர்க‌ளும் இன்ப‌மாய் இருக்க‌ விரும்புகின்ற‌து, அத‌னால் துன்ப‌த்தினை இல்லாத‌க்குவ‌தே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகின்றது.

ம‌றுபிற‌ப்பு உண்டா?
ஆம் எல்லா செய‌ல்க‌ளுக்கும் பொருத்த‌மான‌ விளைவுக‌ள் எப்போதும் காண‌ப்ப‌டுகின்ற‌து, செய‌ல‌க‌ளின் தொட‌ர்ச்சி வாழ்க்கையாகின்ற‌து, இன்றைய‌ வாழ்க்கை முன்ன‌ர் செய்த‌ க‌ர்ம‌த்தின் ப‌ல‌ன், நாளைய‌ வாழ்க்கை இன்று செய்வ‌த‌ன் ப‌ல‌ன் என்ப‌து பௌத்த‌த்தின் க‌ர்ம‌ கோட்பாடு. தியானத்தின மூலம் இந்த சுழலில் இருந்து வெளிவந்து பரி நிர்வாணம் எனும் ஞானத்தினை அடைதலே தியானத்தின் பயன்.

முன்னர் ஞானம் பெற்றவர்கன் அனுபவங்களை கற்றல் மிக அவசியமான ஒன்று, ஆனால் இந்து மதத்தில் கூறப்படும் குருவைப் பணிதல் எனும் பக்தி நெறி அல்ல இது, மாணவன் குருவின் போதனைகளை கேட்டு தன் அறிவு மூலம் சிந்தனை செய்து தியானித்து உண்மையினை அறிந்து கொள்ளல் வேண்டும்.

தியான‌ம்:இதுவே துன்ப‌த்தினை நீக்குவ‌த‌ற்கான‌ அடிப்ப‌டையாகும், ம‌ன‌தின் செய‌ற்பாட்டினை மெதுமெதுவாக‌ அறிந்து துன்ப‌ங்க‌ளிற்கான‌ கார‌ண‌ங்க‌ளை உண‌ர்ந்து விழிப்புண‌ர்வுட‌ன் நீக்கி ம‌ன‌தினை வென்று ஞான‌ம‌டைய‌ச் செய்யும் செய‌ன் முறையாகும்.

பிரார்த்த‌னை:இது திபெத்திய‌ பௌத்த‌ முறையில் (மகாயான, வஜ்ரயான) காண‌ப்ப‌டும் ஒரு அம்சமாகும். திபெத்திய‌ பௌத்த‌ம் தாந்திரீக‌ க‌ல‌ப்பு போத‌னைக‌ளினால் வ‌ந்த‌ ஒரு முறையாகும். இத‌ன் மூல‌ம் நீல‌ தாரா, ப‌த்ம‌ச‌ம்பவா போன்ற‌ தேவ‌தைக‌ளை ப‌ணிந்து த‌ம‌து சாத‌னைக‌ளை செய்வ‌ர்.

தேர‌வாத‌ பௌத்த‌த்தில் பிரார்த்த‌னை என்ப‌து இல்லாத‌ ஒன்றாகும், தேரவாத‌ பௌத்த‌ம் கடவுள் என்ற ஒரு இருப்பை மறுக்கிறது. ஆதலால் பணிந்து பிரார்த்திக்கும் முறையினை ஏற்பதில்லை.

ஆனால் இரண்டு பிரிவுகளும் மனதினை பக்குவப்படுத்துவதற்காக சடங்கு முறைகளை கொண்டுள்ளமை ஒற்றுமையான அம்சமாகும்.

புத்த‌ர‌து ம‌ன‌ம் ப‌ற்றிய‌ கூற்றுக‌ளில் பிர‌தான‌மான‌து எம‌து சூழ‌ல் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் பெரும்பாலும் எம‌து அக‌ எண்ண‌ங்க‌ளினாலேயே உருவாக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌தாகும். அந்த‌ எண்ண‌ங்க‌ளின்ப‌டியே ஒருவ‌ர‌து உட‌ல், சூழ‌ல‌து ஆரோக்கிய‌ம் த‌ங்கியிள்ள‌து, ம‌ன‌தில் அந்த‌கார‌ணியினை நீக்கும் பொழுது சூழ‌லிலும் உட‌லிலும் அந்த‌க் கார‌ணி நீங்கி குண‌ம்பெறும் என்ப‌து பிர‌தான‌ விட‌ய‌மாகும்.

புத்தரின் இன்னொரு கருதுகோள் எல்லா வஸ்துக்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது, இந்த தொடர்புகள் ஒன்றிணைந்து வலைப்பின்னலாகி மனதின் மூலம் மனிதனுக்கு துன்பத்தினை தருகின்றது. இந்த தொடர்புகளை தியானத்தின் மூலம் அறிந்து, ஒவ்வொன்றாக நீக்கி ஒன்றுமற்ற சூன்யத்தினை அடையும் வழியினையே பௌத்தம் போதிக்கிறது.

பௌத்த கர்ம கோட்பாட்டின் படி நாம் மற்றையவருக்கு என்ன வழங்குகிறோமோ அது திரும்பவும் எமக்கு கிடைக்கும் (வினை விதைத்தவன் வினையறுப்பான்), ஆதலால் துன்பத்தினை நீக்கும் பௌத்த கோட்பாட்டினை பின்பற்றுபவர்கள் நல்ல காரியங்களை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் அவற்றை ஒரு கட்டுப்பாடான நிபந்தனையாக விதிக்கவில்லை. இதற்காக பஞ்ச சீலம் எனப்படும் ஐந்து ஒழுக்க நியதிகள் போதிக்கப்பட்டுள்ளது. அவையாவன பொய் சொல்லாமை, களவு இல்லமை, மற்றவரை துன்புறுத்தாமை, முறையற்ற காமம், மனதினை அசுத்தமாக்கும் விடயங்களில் ஈடுபடாமை என்பனவே இந்த ஐந்து ஒழுக்கங்களாகும்.

ஜீவ காருண்யம் எனப்படும  இரக்கமும் முதன்மையாக போதிக்கப்படுகிறது. எம்மீதும், எம்மைச் சூழ உள்ளவர்கள் மீதும், நாம் சந்திப்பவர்கள் மீதும் இரக்கமுடனும், அன்புடனும் நடந்து கொள்வது மனதின் அழுக்குகளை நீக்கும்.

புத்தர் போதித்தவற்றில் முக்கியமான ஒரு போதனை நடுநிலமை, எந்த விடயத்திலும் மனதினை அதிகம் செலுத்துவதோ, அல்லது சோம்பலினால் உற்சாகம் அற்று இருத்தலோ சூடாது, எதிலும் அளவாக, மிதமாக இருத்தலே போதிக்கப்படுகிறது.

ஞானத்தினை பெறுவதற்கான முயற்சியினை எப்போதும் தாமதிக்க கூடாது என்பது புத்தரின் பிரதான போதனைகளில் ஒன்றாகும்.

9 comments:

  1. தங்களின் பதிவுகள் மிக சிறந்த வழிகாட்டியாக உன்னதமாக உள்ளது.என்றும் தொடர்வேன்.
    மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. நல்ல கருத்துப்பகிர்வு.. எல்லா மதங்களிலும் இப்படி ஒரு அற்புதமான சாரம் இருக்கவே செய்கிறது... ஆனால் அதை எத்தனைபேர் சரியாக புரிந்து நடக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி..

    எல்லா மதங்களும் அதன் உண்மையான சாரத்துடன் பின்பற்றப்பட்டால் இந்த உலகில் வறுமையும், தட்டுப்படுகளும், கலவரங்களும், போர்களும், ஏற்றத்தாழ்வுகளும் அறவே ஒழிந்து விடும்.. ஆனால் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. thanks for the great posts. its very useful for ladies also, who can not go out in search of good knowledge.

    ReplyDelete
  4. innimeal naanum ithai pin patruven

    ReplyDelete
  5. நன்றி. மிக அற்புதம்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...