குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 15, 2012

வாசகர் சந்தேகங்கள் : சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா?

எமது சித்தவித்யா பதிவுகளை படித்த நண்பர் ஒருவர் சில சுவாரசியமான கேள்விகளை அனுப்பி வைத்திருந்தார். அவற்றிற்கு எம்மாலான பதிலை கூறியுள்ளோம். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

1 . சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா? (முடியும் எனில் ஏன் பிரம்மச்சரியம் ,பற்று அ ற்ற நிலை அல்லது பாசம் துறத்தல், விந்து கட்டுப்பாடு, காம நோய்? என பலவாறு கூறுகின்றனர் அது ஏன்) தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது) என்று சில பதிவுகளில் படித்து அதிர்ந்து போனேன்.. இது தவறு என்று தெரிந்தாலும் மனதில் சிறு குழப்பம். இதுதான் என் கேள்வியின் அடிப்படை

இந்தக்கேள்வி எழுவதன் அடிப்படை எம்மனதில் உள்ள குழப்பமே என்பது எமது அனுமானம். இப்படியான குழப்பம் எழுவதன் ஆரம்ப புள்ளி நாம் எமது கலாச்சாரத்தின் பண்பாட்டின், தொடர்ச்சியினை இழந்து விட்டதன் விளைவு என்பதே எமது கருத்து.


எமது கலாச்சாரம் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வின் மெய்யியலை எடுத்துக்கூறிய கலாச்சாரம் என்பதனை அறிந்திருப்பீர்கள். வாழ்வில் தர்மத்தினை கொண்டு பொருள் ஈட்டி, காமம் முதல் இன்பங்களை அழகாக அனுபவித்து வீடு எனும் முக்தியடைவதையே வாழ்வியலாக காட்டினர் எமது முன்னோர். இப்படியான கலாச்சாரத்தில் தியானம் செய்வதற்கு இல்லறம் முடியாது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. 


பற்று அற்ற நிலை என்பது ஒருவருடைய மனம் முதலான அந்தக்கரணங்கள்  சார்ந்த ஒன்று, அதற்கும் வெளிவேடங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை. காவிகட்டியவரெல்லாம் பற்று அற்றவருமில்லை, மனைவி மக்களுடன் தொழில் செய்து உலகவாழ்க்கை வாழ்பவரெல்லாம் சம்சாரியுமில்லை. ஒருவரது ஆன்ம முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கையினை மறுப்பதால் உண்டாவதல்ல, வாழ்ந்து அதில் பெற்ற அனுபவத்தினால் படிப்படியாக எமது மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என்பவற்றை வசப்படுத்தி உலகில் இருந்தவண்ணம் தாமரை இலை நீர் போல் வாழ்தலே சித்தர் வாழ்க்கை. ஆன்மிக வாழ்க்கையினால் நாம் அனுபவஞானமே பேறவேண்டுமன்றி அனைத்தையும் துறந்துவிட்டு ஓடுவதல்ல! 

உங்கள் மனதின் எண்ண விருத்திகளும், ஆழ் மனப்பதிவுகளும் எப்படி உங்களில் செயல் புரிகின்றது என்பதனைப் புரிந்துகொண்டு அதன்படி எமது மனதை மெது மெதுவாக கட்டுப்படுத்தி மனதின் தளையிலிருந்து விடுபட்டு ஆன்ம அனுபவத்தினை பெறுவதே உண்மையான சாதனை வழி, இதை விடுத்து வேறு எதைச் செய்தாலும் மீண்டும் மீண்டும் இந்த சுழலில்தான் சுழல்வீர்களே தவிர மனதின் பிடியில் இருந்து விடுபடமாட்டீர்கள். 

ஆக தியானம் செய்வதற்கோ, ஞானம் பெறுவதற்கோ இல்லறம் ஒரு தடையில்லை, உங்கள் மனமே தடையாகும். குருநாதர் அகத்தியர் - லோபாமுத்திரை அம்மையார், காகபுசண்டர்-பகளாதேவி, வள்ளுவர் - வாசுகி என பெரும்பாலும் அநேக சித்தர்கள் தமது மனைவியுடனேயே இல்லறத்திலிருந்து சாதனை புரிந்தனர். அவர்கள் யாரும் கூறவில்லை இல்லறம் தடை என்று, ஆனால் ஒரு விடயத்தினை கவனத்தில் கொள்ளவேண்டும், இல்ல+அறம், அறத்துடன் வாழ்ந்தாலே இறைவாழ்க்கை, அல்லது இல்லை. 

இப்படியான கருத்து வருவதற்கு சித்தர்களில் இன்னொரு வகுப்பினரின் கருத்துக்களை தவறாக விளங்க்கிகொண்டமையும் காரணமாகலாம். பட்டினத்தார், பத்திரகிரியார் பாடல்கள் எல்லாம் உலக வாழ்க்கையினை சாடுவதாக காணப்படும். இதனை பொருள் கொள்ளும் போது அதனை தற்காலத்து பொருள் கூறும் ஆசிரியர்கள் விரக்தி நிலைப்பொருளாக உரைக்கின்றனர். அது விரக்தி நிலையில்லை "நிவிருத்தி" நிலை, எல்லாம் அனுபவித்து சலித்ததால் இனி என் இவை என்று பாடியவை, பட்டினத்தார் ராஜாவிற்கு பணம் கொடுக்க கூடியளவு செல்வந்தன், போக பாக்கியங்களையும் அ னுபவித்து இதெல்லாம் என்ன? என்று பாடியவை. 

உங்களின் அடுத்த விடயம் பிரம்மச்சார்யம் சார்ந்தது, பிரம்மச்சார்யம் என்பது பிரம்மத்தை ஆச்சரித்து (சார்ந்து) இருத்தல் என்று பொருள். விந்தினை வலுக்கட்டாயமாக அடக்குதல் என்று பொருளல்ல, பிரம்மத்தில் மனதை வைக்க, மனம் அடங்க, அதனுடாக, பிராணன் அடங்கி தானாக விந்து கட்டுப்படுத்தலே உண்மையான பிரம்மச்சார்யம். அதை விடுத்து வலுக்கட்டாயமாக அடக்கினால் ஆண்மை அற்றுப்போகும். 

நீங்கள் வாசித்து அறிந்த "தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது)" என்ற கருத்து ஒருவகையில் உண்மையானதே, ஒரு சில சித்தமருத்துவர்களும், யோக ஆசிரியர்களும் வீணாக பீதியை கிளப்பி தம்மை பெரியவர்களாக காட்டிக்கொள்ள இப்படியான கருத்துக்களை பரப்பி ஆழ் மனத்தில் பதிவித்து விடுகிறார்கள். இதை உறுதியென அநேகர் நம்பி பெரும் உடல் மனக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர் . உண்மையில் காம சக்தி இல்லாத ஒருவன் எக்காரியத்தினையும் செய்யமுடியாது. காமம் என்பதும் பசி, கோபம், போன்றவொரு உணர்ச்சியே. அதனை அழித்து விட்டால் விதை இல்லாது போய்விடும். அதன் பின் ஆன்மிகமும் இல்லை, இல்வாழ்க்கையும் இல்லை.

விந்து சக்தியினை சரியான முறையில் பிராணாயாமத்தினால் ஆறாதாரங்களில் பிராண சக்தியுடன் கலந்து உயர் பரிணாமத்தினை அடைவதே குண்டலினி யோகத்தின் நோக்கம். இது முழு விழிப்புணர்வுடன் நடைபெறுவது. இப்படி நடைபெறும் போது உங்களது உணர்வின் கட்டுப்பாடு உடல் மீது கட்டாயம் இருக்கும். அதனால் ஆண்மை இழந்து விடுவோம் என்ற பயம் தேவையில்லை. சரியாக விளங்கிக்கொண்டு செய்தால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. அரைகுறை விளக்ககொண்டு, ஆழ்மனத்தில் பயத்தோடு செய்தால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. 

எமது முன்னோர்கள் காமத்தினை அடக்கச் சொல்லவில்லை, அனுபவித்து உயர்நிலை அடையவே வழிகாட்டினர். காமத்தினை அனுபவித்தல் என்பதன் பொருள் இக்காலத்தைப்போல் அல்லாமல் உணர்வை உயரிய பொருளில் வைத்து (எப்படி எனின் கோயில் சிற்பங்களில் ஆண் - பெண் உறவுகளை சித்தரித்து) அதனை புனிதமாக அணுகினார்கள். அதனால் அது சமூகத்திற்கும் தனி மனிதனிற்கும் உளவியல் ரீதியாக ஆரோக்கியமான ஒன்றாக விளங்கியது. இது அவர்களுக்கு இயல்பான பிரம்மச்சாரியத்தினை தந்தது. ஆனால் இன்று சமூகம் அப்படி இல்லை. இதனாலேயே இப்படியான பயங்கள் மனதினை ஆட்டிப்படைகிறது.

போகர் என்ற பெயரே போகத்தின் மூலம் யோகத்தினை அடைந்தவர் என்பதினால்தான். திருமூலரின் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் பரியங்க யோகத்தில் விரிவாக இதைப்பற்றி கூறியுள்ளார். இந்த தளத்தில் இது பற்றி இதற்கு மேல் விவாதிக்க முடியாது ஆதலால் குருவருள் இருப்பின் தனியான வலை ஒன்று அமைத்து இது பற்றி விவாதிப்போம்.

உங்களது இந்தக்கேள்வி எமது பாரம்பரிய அகவாழ்கையின் சிறப்பினை நாம் இழந்து நிற்கிறோம் என்பதனையும் மறைமுகமாய் சுட்டிக்காட்டுகிறது.

வாசகர்களே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!

மற்றைய கேள்விக்கான பதில்கள் தொடரும்...

சத் குருபாதம் போற்றி

5 comments:

  1. தங்களின் பதிவிற்கும், சிரத்தைக்கும் நன்றி அருமையான விளக்கங்கள்...தொடருங்கள்...

    ReplyDelete
  2. "வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" விருப்பு, வெறுப்பற்ற‌ நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை. அதாவது நிரந்தர ஆனந்த நிலை, பேரான‌ந்தநிலை கிட்டும். தியானத்தின் நோக்கமே அது தான்.
    இதில் இருவழிகள் உள்ளன, அதாவது அனுபவித்து தாண்டும் நிலை. வெறுத்து ஒதுக்கும்(வேண்டாம் என்று ஒதுக்கும்) நிலை. இரண்டுமே ஞானத்திற்க்கு இட்டுச் செல்லும்.
    விருப்பு வெறுப்பற்ற நிலை என்பது எதன்மீதும் பற்றோ(ஆசையோ), வெறுப்போ இருக்கக் கூடாது, அதவது காமம், கோபம், பயம், மரணபயம் (ஒவ்வொன்றிர்க்கும் தனித்தனி பயிற்ச்சிகள் உள்ளன) போன்றவற்றின் மனித குணங்களின் அனைத்தின் மீதும் பற்றோ, வெறுப்போ எதுவுமே இல்லாத நிலையில் மனம் சலனமின்றி ஆகும், அப்போது நிரந்தர ஞானம் கிடைக்கும்.
    ...............வாழ்க வளமுடன்!...............

    ReplyDelete
  3. என் பதிலுக்கு பொறுத்துக்கொள்க :))

    எந்த விதமான ஆன்மீக பயிற்சியாக இருந்தாலும் தீவிரமான தொடர்ந்த பயிற்சி இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான பதில்கள் தானாக நம்மைத் தேடிவரும்.

    இந்த கேள்விகள் எல்லாம் அதிகம் படிப்பதால் மனதில் எழுபவை., படிப்பது தவறு என்று சொல்லவில்லை :)

    பயிற்சிகள் முக்கியம். இதற்கான பதில்கள் என்ன சொன்னாலும் கிளைக் கேள்விகள் எழுமே தவிர தீராது..

    மேற்கண்ட கேள்வி, குறிப்பான கேள்வியாக இல்லாமல் பொதுவான கேள்வியாகவே எனக்குத் தெரிகிறது. அதனால் இந்த கருத்தைப் பகிர்கிறேன்

    நன்றி

    ReplyDelete
  4. நன்றி நிகழ்காலத்தில் சிவா அவர்களே,

    தங்கள் கருத்து சரியானதே!

    இதற்கு பதிலளித்ததன் நோக்கம், கேள்வி கேட்டவரது ஆர்வம் குன்றி யோகப்பாதையில்சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதும், அவரை மேலும் சிந்தித்து யோகப்பாதையில் சரியான பார்வையுடன் விடயத்தை அணுகுவதற்காகவே,

    பெரும்பாலான யோக‌ஆசிரியர்களும் சரி, வலைத்தளங்களும் சரி, விடயங்களை தெளிவாக மக்களுக்கு தராமல், பயமூட்டி அவர்களது ஆர்வத்தினை சிதைப்பதிலேயே உள்ளன, இந்த ஆழ்மனப் பயங்களை விரட்டவேண்டும் என்பதனை தெளிவாக்குவதற்கு இப்படியான ஆரம்ப கேள்விகளிற்கு பதில் அளிக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு, அத்துடன் கேள்வி கேட்ட அன்பர் உண்மையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் இருப்பது கண்டே பதில் எழுதினோம்.

    நீங்கள் கூறிய கருத்தையும் கேட்ட நண்பர் தன் முன்னேற்றம் வேண்டின் ஏற்று தெளிவடைவார் என்று எண்ணுகிறோம்.

    தொடர்ந்தும் உங்கள் நடு நிலையான கருத்துக்களை தெடிவியுங்கள்!

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. ரொம்ப சரி. கேள்வி கேட்ட நண்பர் கொஞ்சமாவது நாகரீகம் தெரிந்தவர் என்று நினைக்கிறேன்.
    ஆனால் இன்று சொல்லவே கூசும் அளவிற்கு மிக மிக மோசமான நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
    என்பதை மறுக்க முடியாது. தாரள மது, சினிமா, ஆபாச பத்திரிகைகள் என ஒட்டு மொத்த சமூகமும் நோய்வாய் பட்டுகிடகிறது.

    எந்த சித்தன் வந்தெம்மை மீட்பானோ...

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...