குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 09, 2016

காயத்ரி லகு அனுஷ்டான சாதனை அனுபவம்

எம்மிடம்  காயத்ரி சாதனை பயின்று லகு அனுஷ்டான ஜெபம்  பூர்த்தி செய்த மாணவர்  ஒருவரின் அனுபவம். 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
குரு வணக்கம்,

28-03-2016 அன்று தொடங்கப்பட்ட காயத்ரி லகு அனுஷ்டானம் 05-04-2016 அன்று பூர்த்தி செய்தோம்

அது குறித்தான அனுபவம் பற்றி

முதல் நாளான 28-03 திங்கட்கிழமை அன்று அனுஷ்டானம் தொடங்கி மந்திர மாலைகள் ஆரம்பித்த போது நான் இருந்த நிலை மிகவும் crtical ஆக இருந்தது!
நான் எங்கு இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தெரியாத நிலையில் மந்திரம் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு சில நொடிகளுக்கும் விழிப்புணர்வு நிலைக்கு வர முயற்சித்து ஜெபம் செய்து கொண்டே இருந்தேன்.
பிறகு என் வகுப்பிற்கு சென்றேன். அங்கு being in present என்ற நிலையினில் இருக்க சில விடயங்கள் கற்றுக்கொண்டேன் பாடம் கவனிக்கையில்.
முதல் 9 மாலைகளுக்கு உடல் ஒரு விதமாய் எரிய செய்தது. நான் அறிந்து கொண்ட விடயம் மூலம் மாலையும், இரவும் சிறிது முன்னேற்றமுடன் ஜெபத்தை முடித்தேன். ஜெபம் செய்ய செய்யவே சில சில விடயம் யோசனையாய் உதிக்கும். உதாரணம்: காயத்ரி தேவி தாயின் படத்தை முழுமாய் observe செய்வது, மிகவும் முடியாத நிலையில் இடையில் நிறுத்தி மூச்சினை கவனிப்பது பிறகு தொடர்வது போல்.
உடல் எரிய செய்தது.

இரண்டாம் நாள் காலையில் செய்யும் போதும், இந்த நிலை தொடர்ந்தது. பின்பு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். புதன் அன்று தங்கள் பதிலைக் கண்டேன். சிந்தித்தேன்.
ஆம். என்ன ஆகிட போகின்றது. குருமார்களும் அன்னையும் நிச்சயம் எனக்கு எது நல்லதோ அதை செய்வார்கள் என்று செய்யத்துணிந்தேன். நம்பிக்கை தான் எல்லாம்! (எனது வருங்கால மனைவியும் ஒரு காரணமானாள்)
உத்வேகமோடு, அன்று மாலை மீண்டும் தொடர்ந்தேன். இன்று எரிச்சல் இல்லை. ஆனால் பிராண ஓட்டம் கைகளில் நன்றாக் தெரியும் அளவு இருந்தது. உள்ளங்கை முழுவதும் ஒரு மாதிரி ஊருவது போல்!

நான்காம் நாள் இரவு, ஒரு இயல்பு நிலைக்கு திரும்பியது போன்ற உணர்வு. மறந்தது போன்றவை எல்லாம் ஞாபகம் வந்தது போல் இருந்தது.
ஐந்தாம் நாள் ஜெபத்தின் போது நான் ஒரு சரியான நிலையில் இல்லாமல் அழுத்தமாக உணர்ந்தேன். இருப்பினும் செய்யலாம் என்று எண்ணி செய்ய பார்த்தேன். அன்றைக்கென்று ஒருவர் அந்த இடத்தில் இரவு தங்க நேர்ந்தது. என்னால் இயல்பாய் செய்ய முடியவில்லை என்று இரவு ஜெபம் செய்யவில்லை.
அடுத்த நாள் காலை நன்றாக் உனார்ந்த போது தான், நான் அந்நிலையில் செய்யாமல் விட்டது நல்லது என்று உணர்ந்தேன்.
எட்டாம் நாள் இரவு முற்றிலும் இயல்பாக ஆனது போல் உணர்ந்தேன். நான் வேறு ஒன்றை நினைத்திருந்தேன். தெளிவாக உணர முடியும் என்பது போல். வழமையான என் அவசர தனத்தால் இரவு ஜெபத்தில் அதை நினைத்து கொண்டு எதையோ கஷ்டப்பட்டு மாற்ற செய்ய மீண்டும் disturb பண்ணி விட்டது போல் ஆனது. ”எல்லாம் உடனே நடக்காது. எதுவும் படிபடியாய் தான் நடக்கும்” என்று நினைவுக்கு வந்தது. 
எதையும் குருமார்களிடமும், அன்னை காயத்ரி தேவியிடமும் விட்டுவிட வேண்டும் என்பது மூன்றாம் நாள் முதலே நினைவிற்கு வந்து கொண்டே இருக்கும்.

சாதனையின் போது நான் கற்ற (உணர்த்தல் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்ட) விடயங்கள்
*எதிலும் அவசரம் கூடாது. 
*இறையிடம் நம்பிக்கையோடு வேண்டுதல் செய்து விட்டுவிட்டு அதற்கான செயலை இயன்ற வரை சிரத்தையுடன் செய்ய வேண்டும்.
*அவர் அவர்களின் அனுபவம் தன்மை பொறுத்து உணர்த்தபடும் விதமும் மாறுபடும்!
*விழிப்புணர்வு நிலை முக்கியம் (இயன்றவரை)
*கற்பனை எதுவும் செய்திடாமல் வரும் பலனை ஏற்க வேண்டும். அதுவே சரியானதாக, முழுமையானதாக இருக்கும்!
*எந்த நிலையானாலும் நம்பிக்கையோடு முயற்சித்தால் பலன் நிச்சயம்.
*நான் வாழும் வாழ்விற்கு எது தேவையோ அதை மட்டும் சிந்தித்தால் போதும். வீண் ஆராய்ச்சியை விட்டுவிட வேண்டும்.
*எதிர்காலம் இப்படி தான் இருக்கும் என்று முடிவு செய்து செயல்படுவது கூடவே கூடாது! சிந்தனை புத்தி கொண்டு ஆராய்ந்து செயல்பட வேண்டும்

நான் என் மன சலனம் அதிகமாய் விழிப்புணர்வு கொண்டு வர முடியாத போதெல்லாம், 
-காகிதத்தில் எழுதிய சங்கல்பத்தைப் பார்த்துக்கொண்டே ஜெபம் செய்தேன்.
-சித்த சாதனையை படித்துக்கொண்டே செய்தேன்

இறுதி மூன்று நாட்கள், காலையில் சூரிய ஒளியில் நினைந்துகொண்டேன் 10 நிமிடம். நிறைய ஜெபம் தொடர்சியாய் செய்ய முடிந்தது. ஒரே நாளில் 30 மாலைகள் பக்கம் செய்ய முடிந்தது.

ஆறாம் நாள் முதலே மிக நல்ல வித்தியாசம், செயல்பாட்டில். தியான அறை பகுதியை சுத்தம் செய்ய தோன்றியது, காகங்களுக்கு காலையில் தயிர் வைத்தது, ஜெபம் முடித்ததும் தங்கள் தளத்தைப் படிக்க தோன்றியது,

ஒரு நாள்... ஒரு விதமாய் வெறுமையாய் இருந்த போது (லகு அனுஷ்டானம் குறித்த தங்கள் மின்னஞ்சல் மூலம்) காயத்ரி சாதனையின் மகிமை பல படித்தேன். நன்றாக உணர்ந்தேன். மீண்டும் ஜெபத்தைத்தொடங்கினேன்.
இப்படி ஏதோ ஒன்று இறுதி வரை என்னை வழி நடத்திக்கொண்டே சென்றது!!

அனுஷ்டானப்பூர்த்தி அன்று இரவு மிக தைரியமாய் சரியான கருத்துகளை ஒரு அண்ணனிடம் ஒரு வாதத்தில் பேசினேன்! 
என்னை அறியாமல் செய்யும் பல விடயத்திலும் நற்பலனே கிடைத்தது.
------
இன்று பல கசடுகளும் அழுக்குகளும் நீங்கி ஒரு நன்மை மிக்க வளர்ச்சி பாதையில் இருக்கின்றோம் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. நான் நிச்சயம் சிந்தித்து செயற்படும் தன்மையைப் பெறுவேன். என் கற்பனையில் மனம் கொண்டு இயங்கும் தன்மையை கலந்து எனுக்குள் இருக்கும் சுயதன்மையை அடைவேன். அனுபவம் மூலம் வாழ்வைக் கற்று வாழ்வேன். என் உணர்ச்சிகள் மீளும் என்று நம்பிக்கை கொள்கிறேன். என் வாழ்விற்கு நான் பொறுப்பேற்று வாழ வேண்டும் என்ற உணர்வுபூர்வ புரிதல் அடைவேன்!

நான் பெற்ற அனுபவம், உணர்ந்த விடயம் யாவுமே குரு அருளால் மட்டுமே வந்தது! 
நான் அடையும் அனைத்து முன்னேற்றமும் தங்கள் அருளால் வந்தது.
மிக்க நன்றி குருவே. 

இப்படிக்கு
அன்புடன்
ஜெயசீலன்

Friday, April 08, 2016

அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் பற்றி வாசகர்கள்


நூலைப்படித்த அன்பர்கள்  சிலரது கருத்துக்கள்! 
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 
இந்த புத்தகத்தை வாங்குவதற்கு காரணம் என்ன என்றும், எப்படி வாங்கினேன் என்றும் பல முறை வியந்திருக்கிறேன். ஏனென்றால், எனது தற்பொழுதைய பொருளாதார சிக்கலுக்கிடையில், இது என் முயற்சி/சுயநினைவின்றி நடந்தது. இதற்கு அந்த அகத்தியர்க்கும், கடும் உழைப்பிற்கு பின் புத்தகமயமாக்கிய உங்களுக்கும் எனது நன்றிகள்.


புத்தகத்தை முழுமையாக படித்து முடிக்கவில்லை. குரு மந்திரமும், "முதல் தகுதி" என்ற முதல் ஞானத்தை மட்டுமே மனனம் செய்துள்ளேன். அதற்குள் ஏற்பட்ட அனுபவங்களில் எதை சொல்ல எதை சொல்லாமல் மனதிலேயே வைத்து அனுபவிக்க என்று தெரியவில்லை.



அகத்தியர் இன்னும் எனக்கு ஒரு சத்குருவை காண்பிக்கவில்லை (அல்லது நான் அடையாளம் காணவில்லை). ஆனால், முதல் படி நிலையாக, அகத்தியரின் தொடர்பு கிடைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கடந்த சில நாட்களாக, பல எளிய (பரி)சோதனைகள். "முதல் தகுதி" எனக்கு உண்மையிலேயே இருக்கிறதா என்பதாக சோதனைகள் நடந்துகொண்டிருகின்றன.



திருக்குறள் 1330 பாடல்கள் கொண்டது. ஆனால், முப்பதே பாடல்களில் அனைத்து கருத்துக்களையும் அடக்கிய நூல் இது. இதனை பின்பற்றும் சாதகனுக்கு என்ன குறை இருக்கும்? இந்த 30 பாடல்களில் இல்லாத கருத்துக்கள் என்ன? இந்த 30 பாடல்களில் இல்லாத தீர்வுகளா? சித்தர்கள் என்றாலே வைத்தியர்கள் என்ற கொள்கை கொண்ட என்னை போன்றவர்களுக்கு ஒரு சவுக்கடி.



அதேபோல், இந்த புத்தகத்தை நீங்கள் எழுதியாத ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (கடும்) உழைப்பு மட்டுமே உங்களுடைது. உங்களை ஒரு கருவியாக அகத்தியர் உபயோகபடுத்தியுள்ளார். இதை எழுதியது அந்த அகத்தியரே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.



அகத்தியரே எழுதி, அதற்கு அகத்தியரே விளக்க உரையும் கொடுத்துள்ள ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம். இதனை எவ்வாறு விமர்சனம் செய்வது?


போத்தி காளிமுத்து 

*********************************************************************************************************


ஐயா,
தாங்கள் எழுதிய ஸ்ரீ அகத்தியர் யோக ஞான திறவுகோல் புத்தகம் கிடைக்கப் பெற்று தினம் ஒரு பாடம் வீதம் படித்து வருகிறேன்.
அடியேன், கடந்த 16 வருடமாக தேடிய தேடலுக்கு தமது நூலில் விளக்கமும் வழி முறையும் கிடைத்து உள்ளது.
ஆனால், ஸ்ரீ அகத்தியர் பாடலில் மகிழ்ந்து கொண்டு துள்ளி விடாதே என்ற அறிவுரையை உணர்ந்து அடக்கம் காண்கிறேன்.
அதை கண்டு எனது மனம் மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டு உள்ளது. சாதாரணமாக பார்த்தால் தெளிவாகத்தானே பாடல்கள் உள்ளன எனத் தெரிகிறது. ஆனால் அப்பப்பா..!!!!
இந்த நூல் மூலம் அடியேனது இலட்சியத்தை அடைவேன் என்ற உறுதியை அடைந்து உள்ளேன் ஐயா.
எத்தனை பூட்டுகள் அதற்கான திறவுகோல்கள்..... எழுதியவரின் பூரண அருள் இல்லாமல் இவற்றை திறக்கவே முடியாது.. மிக்க மகிழ்ச்சி ஐயா....
அதற்கான மெய்ஞான குரு ஸ்ரீ அகத்தியரின் அருளாசியும் தங்களின் வழி காட்டுதலும் பூரணமாக கிடைக்கும் என நம்புகிறேன்.


சண்முகசுந்தரம் - மைசூர்

*************************************************************


அன்பு வணக்கம்,


நேற்றை ராஜயோகி ராஜமோகன் அய்யாவின் அணிந்துரை முதற்கொண்டு தங்களின்
அகத்தியர் யோக ஞானத் திறவுகோலை (புத்தகத்தை) படிக்க தொடங்கினேன்.



இது வரை தங்களைப் பற்றியும், எத்தனை அதிக உயரிய அறிவும் அனுபவமும்
ஞானமும் பெற்றிருப்பினும் இயல்பான மேலும் கற்றுக்கொண்டே இருக்கும்
தங்களின் தன்மையையும் புரிந்து கொள்ள ஆரம்பித்ததில் எனக்கான பாடம்
தொடங்கியது!!



ஒவ்வொரு பாடல் விளக்கத்திற்கும் (பாடத்திற்கும்) முன் தங்கள் மாணவர்களை
குறித்து அழைக்கும் போது, எங்களை அந்த பாடத்திற்கு எத்தகைய தன்மையும்
விடயமும் புரிந்தவர்களாய் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை தெரிவிப்பது
சிறப்பு :)
 பாட இறுதியில் கேள்வி முறை அடுத்த பாடத்திற்கு தயார் செய்வதாய் (தெளிவு
பெற-சித்ததில் பதிய) ஏதுவாய் உள்ளது!



இது வரை யாம் மூன்று பாடல் படித்துள்ளோம் குருவே. 


ஜெயசீலன்  மாதேஸ்வரன் , வேலூர்  

Tuesday, April 05, 2016

வசந்த நவராத்ரி காயத்ரி லகு அனுஷ்டான வழிகாட்டி

எதிர்வரும் எட்டாம் திகதி (08th April 2016) வசந்த நவராத்ரி தொடங்குகிறது.

காயத்ரி சாதனைக்கு மிக உகந்த நாள். தினசரி ஒழுங்காக நூற்று எட்டு காயத்ரி ஜெபிப்பவர்கள் லகு அனுஷ்டானம் பூர்த்தி செய்யலாம்.

இதற்குரிய வழிகாட்டல்களை இந்த வலைத்தளத்தில் பெறலாம்:
1. துரித சித்தி தரும் நவராத்ரி காயத்ரி அனுஷ்டானம் :http://yogicpsychology-research.blogspot.com/2012/10/02.html 
2. அனைவரும் செய்ய கூடிய எளிய காயத்ரி உபாசனை முறை:http://yogicpsychology-research.blogspot.com/…/09/05_30.html 
3. காயத்ரி சித்த சாதனை : https://drive.google.com/…/0B_q1uZTstapZSmxYOUZHTG1nd2s/view 
4. காயத்ரி சாதனை வழிகாட்டி: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_15…
5. காயத்ரி அனுஷ்டானம் பற்றிய விபரம்: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_15… 
6. காயத்ரி தேவி தியான ஸ்லோக விளக்கம் :http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_7.…
7. காயத்ரி பெண்கள் செய்யலாமா?: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post_31… 
8. காயத்ரி உபாசனை எளிய வடிவம்: http://yogicpsychology-research.blogspot.com/…/blog-post.ht… 
9. காயத்ரி மந்திரமும் சர்வ தேவதா சித்தி முறைகளும்:http://yogicpsychology-research.blogspot.com/20…/…/01_6.html
10. பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள்:http://yogicpsychology-research.blogspot.com/2012/10/03.html 

அனைவரும் இந்த வருட வசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டானம் பூர்த்தி செய்ய அன்னையிடமும், குருமண்டலத்திடமும் பிரார்த்திக்கிறோம்.


அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்




பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...