குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 30, 2018

கேள்வி பதில்: சித்தவித்யா குருமண்டலம்

நம் சித்த வித்யா குருமண்டல நாமாவளியில் உள்ள குருமார்களுக்கும் காயத்ரி சாதனைக்கும் உள்ள தொடர்பை விளக்கி ஒரு பதிவு போட வேண்டுகிறேன் ஐயா.



மேற்குறிப்பிட்ட படம் இதற்கான விளக்கத்தின் அடிப்படை, காயத்ரி மூலசக்தி - பிராணன், மூலசக்தியின் தொடர்பில்லாமல் இந்தப்பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. 

ஆகவே காயத்ரியிற்கும் உடல் பெற்று புவியில் சாதனை புரிந்த அனைவருக்கும் தொடர்பு இருக்கிறது. 

பிராணன் எங்கு எங்கு உள்ளதோ அங்கெல்லாம் காயத்ரி உள்ளது. அதனை செயற்படுத்தும் தொழில் நுட்பமே காயத்ரி மந்திரம். 

செயற்படுத்தி வெற்றிகண்ட அனுபவஸ்தர்களே குருமார்கள். 

ஆகவே குரு நாமத்தை ஒளி ரூபமாக கூறிவர எமது நிலைக்குத்தக்க அவர்கள் செயற்படுத்திய  அனுபவ அறிவு எமது மனதினூடாக புத்தியில் விழிப்படைந்து எம்மை வழி நடாத்தும். 

சித்த வித்யா குருமண்டல் நாமாவளி என்பது பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சாதனைக்கான அறிவு சேமிப்பு கிடங்கு (universal knowledge server) என்று புரிதலுக்காக வைத்துக்கொள்ள்லாம். 

கேள்வி பதில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்

தங்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட குருமார்களின் தொடர்பு உள்ளது . மேலோட்டமாக பார்த்தால் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள் போல் தெரிந்தாலும் நிச்சயமாக ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் அனைவரும் தங்களில் இனைகின்றனர்.இது தங்களின் வாழ்க்கையில் எந்த கால கட்டத்தில் எவ்வாறு நிகழ்ந்தது.


முதலில் குருவை நான் தேடி எங்கும் அலையவில்லை! எனக்கு பதின்மூன்றாவது வயதிருக்கும்போது எனது தந்தையார் கூறிய "அகத்திய மகரிஷி எமது குடும்பத்தின் மூல குரு" என்ற வார்த்தையை முழுமையாக நம்பி அவரை ஒரு மரியாதை நிமித்தம் வணங்கி வந்தேன். அடுத்த வருடங்களில் எனது ஞானகுரு ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளை சந்தர்ப்ப வசமாக திட்டமிடாமல் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த சந்திப்பில் அவர் என்னை தனிப்பட ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வந்து பூஜையில் பங்குபெற்றுங்கள் அப்பா! என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து நாட்டு சூழலையையும் பொருட்படுத்தாது சிறுவனாக மாதாமாதம் 100 கிலோமீட்டர் பயணம் செய்வேன். 

ஒருவருடம் கழிந்த பின்னர் எனது தயாரை சந்திக்கவேண்டும் என்று கூறினார். அழைத்துச் சென்றபோது ரிஷி பரம்பரை பற்றிய விளக்கம் கூறி, உங்கள் மகனை மாணவனாக ஏற்றுக்கொள்ளச் சொல்லி குரு நாதர் உத்தரவு, அவன் நீங்கள் விரும்பியபடி கல்வி கற்று, பட்டம் பெற்று, நல்ல தொழில் செய்து, நீங்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வாழ்வான், அதற்கு ஆன்மீகத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. இவற்றை எல்லாம் செய்து கொண்டு ரிஷிகளின் ஆன்ம வித்தைகளை கற்று சாதனை செய்யும் வழியையே நாம் சொல்லிக்கொடுக்கிறோம், அதனால் பயம் வேண்டாம், என்று உறுதி கூறி அடுத்த வைகாசிப்பௌர்ணமியில் உங்களுக்கும் மகனிற்கும் தீக்ஷை கொடுக்கிறோம் என்று சமாதானப்படுத்தி எனது தாயரின் அனுமதி வாங்கிக்கொண்டார். 

பின்னர் அவர் உபதேசித்த வழி இன்றுவரை கடைப்பிடித்து வருகிறோம். அவர் எனது தாயாருக்கு கொடுத்த வாக்கின் படி எனது வாழ்க்கையில் அனைத்தும் நடக்கிறது. 

அவர் உடலை விடுத்த பின்னர் நாமாக எவரிடமும் குருவை தேடி செல்லவில்லை. அவர் உபதேசித்த சாதனையை ஒரு நாள் விடாமல் தினசரி பயிற்சித்து வந்ததுமட்டுமே நான் செய்த முயற்சி. இப்படி பதின்மூன்று வருட சாதனையின் போது பல்வேறு ஆன்மீக வழிகாட்டல்கள் கிடைக்கப்பெற்றன. பற்பல வழிகள் சாதனைமுறைகள் கிடைத்தது. 

பதின்மூன்றாவது வருடத்திற்கு பிறகு ஏற்பட்ட ஒரு ஆன்மீக அனுபவத்தினை விளக்கம் பெற அணுகியபோது தேவிபுரம் குருஜியின் தொடர்பு கிடைத்தது. நான் எனது அனுபவத்தை அவரிற்கு எழுதியபோது அவர் அனுப்பிய பதில் "Can you please come & meet me once?", நான் குருஜியை பார்க்க வேண்டும் என்று வேலை செய்த இடத்தில் லீவு கேட்டபொழுது General Manager இடமிருந்து லீவு தரமுடியாது என்ற பதில் வந்தது. அதற்கு முடிவாக எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு குருஜியை சந்திக்க சென்றேன். 

சந்தித்த போது அவர் " I will initiate you into Srividya" என்றார். அப்பொழுது ஸ்ரீ வித்யா என்றால் என்ன என்று எனக்கு எதுவும் தெரியாது. அதற்கு நான் " Guruji, I am 1000 km away from you, I cannot come and meet you frequently, possibly I can once a year, then how I can learn from you?" என்று கேட்டேன். 

அதற்கு அவர் "Don't worry, I will give you the Guru paduka, that will guide you, also Devi is inside you, she will teach you how to do the sadhana, further If you need any clarification please write to me through email, I will provide you only a short answer, being old man I cannot write long mails" என்று அவரது தெய்வீக புன்னகையுடன் கூறினார். அதை நான் முழுமையா ஏற்றுக்கொண்டு எனது சாதனையை தொடர்ந்தேன். வேலை இல்லாமல் போன சந்தர்ப்பத்தை முழுமையாக எனது சாதனையை பூர்த்தி செய்யும் வாய்ப்பாக மாற்றினேன். குருஜி கூறியபடி சாதனையை முடிக்க எனது நண்பர் ஒருவர் மூலம் உயர்ந்த ஆலோசனை நிறுவனத்தில் வேலை தானாக தேடி வந்தது. 

இதை குருஜியிடம் தெரிவிக்க "when you come next time you will receive poorna deeksha, it is recommended to visit on Navarathri" என்று பதில் வந்தது. அதுபோல் அடுத்தமுறை செல்லும்போது பூரணதீக்ஷை தந்து மற்றவர்களுக்கு கற்பிக்கும் அனுமதியும் தந்தார்.

அதன்பின்னர் அவர்கூறிய ஆசியில் சித்தர்களின் பாடல்களில் உள்ள யோக, ஞான, தாந்திர விளக்கங்கள் மனதில் தெளிவாக புரிய ஆரம்பித்தது, அவற்றை இப்படி கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறோம். 

இதன்படி நான் நேரில் வழிகாட்டல் பெற்ற குருமார் இவர்கள் இருவருமே. 

குருமண்டலத்தில் இருக்கும் மற்றவர்கள் சாதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் தாமாக உதவும் கருணை உள்ளம் உள்ளவர்கள்.  

மேலே கூறிய சுருக்கமான எனது கதையில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய அனுபவ உண்மை என்னவெனில்;
  1. நானாக எந்த குருவையுன் ஆசையில் உத்வேகத்தில் தொடர்பு கொண்டதில்லை, அதேவேளை எனது குருமார்கள் காட்டிய வழியில் இன்றுவரை தவறாமல் நிற்பது, இறுதி வரை நிற்பேன் என்ற எனது உறுதியும் மட்டுமே எனது முயற்சிகள். 
  2. குருவை தேடி அலைவதும், குருவை நாம் ஏற்றுக்கொள்வது போன்றவை உண்மையில் அப்படி ஒன்றும் நிகழ்வதில்லை. எமது மன இச்சையினை விட நமது பக்குவமும், நாம் குருவழி நடக்கிறோமா என்பதே மிக முக்கியம். 
  3. குரு சொல்லித்தரும் உபதேசப்படி நடப்பது மட்டுமே நமது கடமை, நமக்கு எதுதேவை என்பது இறைசக்தி தானாக எமது பக்குவமறிந்து சுரக்கும். ஆக எமது முயற்சிகள் எல்லாம் சரியான பக்குவத்தை எம்மில் உருவாக்குவதுதான். 
  4. குருமண்டலத்தின் நோக்கத்திற்கு தம்மை இணைத்துக்கொள்பவர்களுக்கு அவர்கள் தானாக உதவுகிறார்கள். 
  5. வாழ்க்கையில் ஒருகட்டத்தில் மட்டுமல்ல எல்லா கட்டங்களிலும் எம்மை வழி நடாத்துவதற்கு குருமார் தயாராக திறந்த மனதுடன் தான் உள்ளார்கள், நாம் எமது ஆணவத்தையும் மனக்குழப்பத்தையும் விட்டு சரணாகதி அடைவதில்லை. 

Thursday, January 25, 2018

கூட்டுச் சாதனையின் சில அடிப்படைகள்

பொதுவாக குரு- அகத்திய - காயத்ரி சாதனை செய்பவர்கள் தமது குடும்பத்தவர்களுடன் அமர்ந்து வாரம் ஒருமுறை அனைத்து மந்திரங்களை,சங்கல்பங்களை, சித்த சாதனையை செய்து வருவது மிக நல்லது. 

இதன் அடிப்படை ஒரு கயிற்றை ஒருவர் சேர்ந்து இழுப்பதைக்காட்டிலும் பலர் சேர்ந்து இழுப்பது இலகுவானது. 

மந்திரம் என்பது பிரபஞ்சத்தில் அலைக்கழியும் தெய்வசக்தியை உடலில் ஈர்க்கும் கையிறு, சூத்திரம். இதை கூட்டாக செய்யும்போது அதிக பலன் தரும். 

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும், எம்முடன் ஒத்த மனமுள்ளவர்களுடன், அல்லது எம்மை விட சாதனையில் அதிகம் முன்னேறியவர்களுடன் செய்யும்போது மட்டுமே இந்த விதி பொருந்தும். 

எதிர்ப்பு எண்ணம் உள்ளவர்களும்,  நாம் சாதனை செய்வது பற்றி தவறாக எண்ணுபவர்களும், எம்மீது பொறாமை கொள்பவர்களும், எம்மை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் எனும் மனப்போக்கில் உள்ளவர்களுடன் சாதனை செய்யும் போது இது பல குழப்பங்களை விளைவிக்கும். இந்த நிலை இருந்தால் தனித்திருந்து செய்தலே நலம். 

மேலும் குருவுடனோ, உயர்ந்த சாதகர்களுடனோ சேர்ந்து மந்திர ஜெபம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவறவிடக்கூடாது. ஏனெனில் அந்த குருவின் மந்திர சித்தியும், சாதகரின் உயர்ந்த பிராண ஆற்றலையும் நாம் கவர்வதன் மூலம் எம்மை உயர்த்திக்கொள்ளலாம். 

ஆகவே இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டு கூட்டு சாதனை, ஜெபம் முதலியவை செய்ய வேண்டும். 

பங்குபற்றுபவர்களின் மன நிலை மிக முக்கியமான ஒன்று. 

Wednesday, January 24, 2018

மனிதனை தெய்வமாக்கும் காயத்ரி சாதனை

காயத்ரி சாதனை ஒருவனை அவனது பண்பு நிலை மாற்றத்தை உருவாக்கி எப்படி உயர்த்தும் என்பது பற்றிய ரிஷிகளின் விளக்கம்.
நர கீடக நிலையில் இருக்கும் ஒருவனை நர பசுவிற்கு உயர்த்தி, நர பசுவை நர மானவ நிலைக்கு உயர்த்தி நர மானவ நிலையை மஹா மானவ நிலைக்கு உயர்த்தி இறுதியில் தேவ மானவ நிலைக்கு மனித உடலிலே தெய்வமாக நடமாடச்செய்யும் சாதனை காயத்ரி சாதனை!


காயத்ரி மந்திரம் வேதமாதா, தேவமாதா, விஸ்வமாதா


Tuesday, January 23, 2018

காயத்ரி மந்திரம் எப்படி உருவானது?


காயத்ரி சாதனை கேள்வி பதில்கள்


1. சாதனையில் இலக்குகள் என்ன?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_45.html

2. காயத்ரி சாதனை எனக்கு என்ன பலனைத்தரும்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_72.html

3. மந்திரம் உச்சரிப்பதில், கூறப்பட்ட முறைகள் ஞாபகத்தில் இல்லாததால் தவறுகள் ஏற்பட்டால் எனக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_95.html

4. இந்த சாதனை செய்யும்போது உடலுறவு தவிர்த்தல் அவசியமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_47.html

5. ஒரு நாள் சாதனை தவறவிட்டால் என்ன செய்யலாம்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_15.html

6. சாதனை எந்த திசை நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_57.html

7. சாதனை செய்வதற்குரிய நேரம் எது?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_3.html

8. அமரும் முறை ஏதும் கவனிக்கப்பட வேண்டுமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_81.html

9. சாதனையின் போது உடை எப்படி இருக்க வேண்டும்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_59.html

10. சாதனைக்கு முன்னர் குளிப்பது அவசியமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_55.html

11. நான் அதிகம் பயணம் செய்பவன், இதனால் சாதனை செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு உங்கள் வழிகாட்டல் என்ன?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_50.html

12. சாதனையினை எப்படி தொடங்குவது?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_84.html

13. ஜெபம் செய்வதற்கான முறைகள் என்ன?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_83.html

14. பெண்கள் தமது மாதாந்திர நாட்களில் சாதனை செய்யலாமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_7.html

15. காயத்ரி பெண்கள் ஜெபிக்கலாமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_41.html

16. காயத்ரி அனைவரும் ஜெபிக்கலாமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_67.html

17. நான் மாமிச உணவு உண்பவன், இந்த சாதனையின் போது மாமிசம் உண்ணக்கூடாதா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_75.html

18. எனக்கு வேலை கிடைக்கவில்லை, வீட்டில் மனைவியுடன் பிரச்சனை, வியாபாரம் சரியில்லை இவற்றை தீரும் படி இந்த சாதனையின் பிரார்த்தனையில் கேட்கலாமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_5.html

19. காயத்ரி சித்த சாதனை என்றால் என்ன?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_64.html

20. உலகத்திற்காக சங்கல்பித்தால் எனது நாளாந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_33.html

21. காயத்ரி சங்கல்பம் என ஏன் செய்யச்சொல்லுகிறீர்கள்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_44.html

22. அகத்தியர் மூல குருமந்திரம் என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல சொல்லுகிறீர்கள்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_8.html

23. சித்த வித்யா குருமண்டல நாமாவளி என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல வேண்டும்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_18.html

24. காயத்ரி சாதனைக்கு தீக்ஷை அவசியமா?

நீங்கள் தீக்ஷை அளிக்கிறீர்களா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_4.html

25. ஏன் காயத்ரி சாதனை செய்ய வேண்டும்?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_23.html

26. ஐயா இந்த சாதனையின் போது உணவு கட்டுப்பாடு மற்றும் வேறு எதாவது கட்டுப்பாடு உண்டா?
ஐயா என் மகளுக்கு 4 வயது ஆகின்றது காயத்ரி மந்திரத்தை நன்றாக தவறில்லாமல் சொல்கிறது. தொடர்ந்து சொல்ல வைக்கலாமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_30.html

27. ஐயாவிற்கு வணக்கம் நான் வியாபார நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்லவேன்டியுள்ளது இதனால் சாதனைக்கு இடையூறு எற்படுத்துமா?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_88.html

28. அய்யா காயத்ரி மந்திரத்தை சாதாரணமாக சொல்வதை விட மூச்சு காற்றுடன் கலந்து சொல்ல சொல்கிறார்களே அதை எப்படி சொல்வது, தவிர வெறுமனே சாதாரணமாக ஜெபிப்பது பலன் தருமா? , தவிர காயத்ரி என்பவள் தனி தெய்வமா அல்லது ஆதி சக்தியின் அம்சமா அவளின் தனித்துவத்தை கூறுங்கள்.

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_26.html

29. காயத்ரி மந்திரம் எப்படி உலகிற்கு வந்தது?

காயத்ரி தேவியின் உருவம் , அது மந்திர அக்ஷரங்களுடன் தொடர்பு படும் விதம் பற்றி கூறுங்கள்?

பொதுவான (பூர், புவஹ, ஸ்வஹ) என்ற பொதுவான காயத்ரி மந்திரம் இருக்கும்போது ஏன் எல்லா தெய்வங்களுக்கும்/சித்தர்களுக்கும் காயத்ரி மந்திரம் காணப்படுகிறது?

https://yogicpsychology-research.blogspot.in/2018/01/blog-post_11.html

ஆன்மீகம் என்றால் என்ன? 07: ஆன்மீக வாழ்வு

ஆன்மீக வாழ்வு

வாழ்க்கை இரண்டு பக்கங்கள் உள்ளது. ஒன்று புற வாழ்க்கை, மற்றையது அகவாழ்க்கை.

புறவாழ்க்கை உடலையும் உடல் சார்ந்த இன்பத்தையும் முதலாக கொண்டு இயங்குவது. எமது கல்வி, தொழில், செல்வம், உடல் இன்பங்கள் எல்லாம் புறவாழ்கையின் இலக்குகள்.

அகவாழ்க்கை என்பது எமது எண்ணங்களுக்கு ஆதாரமாக எது இருக்கிறது? நாம் யார்? எமது இன்ப துன்பங்களுக்கு காரணம் என்ன? எனக்கு ஏன் விருப்பு வெறுப்பு இருக்கிறது? போன்றவற்றை அறியும் தேடல் நிறைந்த வாழ்க்கை.

இன்று பலர் புறவாழ்க்கையை இலட்சியமாக்கி விட்டு ஓடத்தொடங்கும்போது இறுதியில் பெரும்துன்பத்தில் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் தமது வாழ்க்கையில் இரண்டு பகுதி அகம், புறம் என்ற இரண்டும் இருக்கிறது என்பதை பிரித்தறியாமல் இருப்பதும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று இயைந்தது என்பதை அறியாமல் இருப்பதுமே.
அகத்தின் மையத்தை ஆன்மா அல்லது உணர்வு என்று கூறுவர். இந்த மையமே மனிதனை இயக்குகிறது. இந்த மையத்தையே இந்திய தத்துவ ஞானம் ஒளியாக, மனித வாழ்க்கைக்கு ஆதாரமான மூல காரணியாக குறிப்பிடுகிறது.

ஆக மனிதன் தனது வாழ்க்கையை ஒழுங்கிற்கு கொண்டுவரவேண்டும் என்றால் புறத்தில் இருந்து அகத்திற்கு செல்ல வேண்டும். அகத்துடன் தொடர்பு கொண்டு வாழும் மனிதன் தனது வாழ்வினை சம நிலைக்கு கொண்டு வர ஆரம்பிக்கிறான். இப்படி சம நிலைக்கு வந்த வாழ்க்கையை புறத்தின் வழி ஓடாமல் அகத்தில் வழி மட்டும் ஓடி சித்தி மூல பரம்பொருளுடன் கலந்தால் அதை முக்தி என்கிறார்கள். இந்த இலட்சியம் கோடியில் ஒருவருக்கே வாய்க்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளதால் தற்கால மனிதனுக்கு அவசியமான அறிவு தனது அகத்தையும் புறத்தையும் சமப்படுத்தல்.

ஆகவே ஒருவன் ஆன்மீக வாழ்வு வாழப்போகிறான் என்று முடிவெடுத்தால் அகத்திலும் புறத்திலும் சம நிலையை கொண்டுவரவேண்டும். இது இல்லாமல் வெறுமனே வேடங்களை போட்டுக்கொண்டு, நூலகளைக் கற்று விளக்கம் கொடுப்பது ஆன்மீக வாழ்க்கை இல்லை.


அகத்தையும் புறத்தையும் சம நிலைப்படுத்தல் ஆன்மீகத்தின் முதல் படி! 

கேள்வி பதில்: சாதனையில் இலக்குகள் என்ன?

சாதனையில் இலக்குகள் என்ன?

சாதனையின் இறுதி இலக்கு இறையுடன் ஒன்றி இறையாதல், எனினும் அதை சாதிக்க நாம் எமது மனதை பண்படுத்த வேண்டும். இப்படி மனதை பண்படுத்த நாம் தொடர்ச்சியாக பயிற்சிக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு இலக்குகள் அவசியம். 

உங்கள் முதல் பயிற்சியின் இலக்கு கீழே தரப்பட்டுள்ளது. 


முதலில் 45 நாட்கள் ஒழுங்காக சாதனை பூர்த்தி செய்வதே உங்களது தற்போதைய இலக்கு. இதன் பின்னர் படிப்படியாக உங்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சாதனை கற்பிக்கப்படும். 

கேள்வி பதில்: காயத்ரி சாதனை எனக்கு என்ன பலனைத்தரும்?

1.     காயத்ரி சாதனை எனக்கு என்ன பலனைத்தரும்?

இறுதியாக பிரார்த்தனையில் கூறப்படும் பதினாறு பேறுகளும், சித்த சாதனையில் எமது மனதில், சித்தத்தில் விழிபடையும் 28 வகையான பண்புகளும் எமது வாழ்வில் அமையும். 

கேள்வி பதில்: மந்திரம் உச்சரிப்பதில், கூறப்பட்ட முறைகள் ஞாபகத்தில் இல்லாததால் தவறுகள் ஏற்பட்டால் எனக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?

1.     மந்திரம் உச்சரிப்பதில், கூறப்பட்ட முறைகள் ஞாபகத்தில் இல்லாததால் தவறுகள் ஏற்பட்டால் எனக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?

காயத்ரி வேத மாதா, பிராண மாதா என்று தாய்மையுடன் குறிப்பிடப்படும் தெய்வம். தாய் தனது பிள்ளை செய்யும் தவற்றை திருத்துபவளே அன்றி தண்டிப்பவள் அல்ல. எனினும் தாய் கூறும் அறிவுரையை பணிவுடன் கேட்டு தன்னை திருத்திக்கோள்ளுபவனே வாழ்க்கையில் முன்னேறுவான் ஆதலால் சாதனையை, மந்திர உச்சரிப்புகளை சரியாக பழகிக்கோள்ள உயர்ந்த சிரத்தையை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து செம்மையாக்க முயற்சிக்க வேண்டும். மேலும் பிழை ஏற்பட்டு விடும் என்ற பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஆர்வத்துடன் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். 

கேள்வி பதில்: காயத்ரி சாதனை செய்யும்போது உடலுறவு தவிர்த்தல் அவசியமா?

1.     இந்த சாதனை செய்யும்போது உடலுறவு தவிர்த்தல் அவசியமா?

இல்லை, இது நித்திய சாதனை, இதற்கு இவ்வாறான கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை. மேலும் உடலுறவு என்பது தீய, சமூக எல்லைகளை மீறியதாக இல்லாமல் வரையறைக்கு உட்பட்ட இருவரும் மனமொத்த உறவாக இருத்தல் அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் மன, பிராண குழப்பங்கள் அதிகமாக ஏற்பட்டும்.  

அனுஷ்டானம் போன்ற துரித ஆற்றல் வேண்டி செய்பவற்றிற்கு உணவு, உடலுறவு தவிர்த்தல் போன்றவை தற்காலிகமாக தவிர்த்தல் அவசியம். இது சக்தியை ஒருமுகப்படுத்தி ஆற்றலை பெறுவதற்காகவன்றி வேறு மூட நம்பிக்கை கருத்துகளால் அல்ல. 

கேள்வி பதில்: ஒரு நாள் சாதனை தவறவிட்டால் என்ன செய்யலாம்?

1.     ஒரு நாள் சாதனை தவறவிட்டால் என்ன செய்யலாம்?
அடுத்த நாள் தவறவிட்ட எண்ணிக்கைக்கு சமனாக ஜெபம் செய்து சாதனையினை தொடரலாம். இது தொடர்ச்சியான பழக்கமாக இருந்தால் சாதனை பலன் தராது.


கேள்வி பதில்: சாதனை எந்த திசை நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்?

1.     சாதனை எந்த திசை நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்?

காலையில் கிழக்கு, மாலையில் மேற்கு, இப்படி வசதிப்படவில்லை என்றால் தெற்கு தவிந்த ஏனைய மூன்று திசைகள் நோக்கி அமர்ந்து செய்யலாம். கிழக்கும் வடக்கும் மிகச்சிறப்பு. 

கேள்வி பதில்: சாதனை செய்வதற்குரிய நேரம் எது?

1.     சாதனை செய்வதற்குரிய நேரம் எது?

சூரியோதயத்திற்கு முன்னரான நேரம் மிகச்சிறப்பு, இல்லாவிட்டால் காலை 0700 மணிக்குள் செய்துவிடுதல் சிறப்பு. தொழில், பயணம் காரணமாக வசதியின்மை ஏற்படும் காலத்தில் அந்த நாளிற்குள் வசதியான  நேரத்தில் செய்து முடித்துவிடவும். 

சாதனை வாழ்க்கையின் முதல் விஷயமாக இருந்தால் அது எம்மை வழி நடாத்தும். ஆகவே நித்திரை விட்டு எழுந்தவுடன் முதல் வேலையாக உடலை சுத்தம் செய்து கொண்டு சாதனையில் அமர்பவர்கள் விரைவாக ஆன்ம சுத்தி பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் குண, பண்பு, சூழ் நிலை மாற்றத்தை விரும்புபவராக இருந்தால் எப்போதும் முதல் வேலையாக சாதனையை வைத்திருங்கள். இந்தப் பழக்கத்தால் மனமும் உடலும் அதிக சக்தி பெறும். ஏனென்றால் நீண்ட உறக்கத்தால் மனமும் உடலும் ஓய்வடைந்து புத்துணர்வு அடைந்திருக்கும், அத்துடன் சாதனை செய்யும் போது இன்னும் வலிமையடையும். 

உறங்கப்போகும் போது செய்ய நினைத்தால் உங்கள் சக்தியின் பெரும்பகுதி அன்றைய நாளில் நடைபெற்ற துன்பங்கள், மன வருத்தங்களிளை சரி செய்வதிலேயே கழிந்து விடும். 

கேள்வி பதில்: அமரும் முறை ஏதும் கவனிக்கப்பட வேண்டுமா?

1.     அமரும் முறை ஏதும் கவனிக்கப்பட வேண்டுமா?

உடலை துன்புறுத்தாது நீண்ட நேரம் அமரக்கூடிய நிலை, முதுகெலும்பு, கழுத்து, தலை ஆகிய மூன்றும் நேராக இருக்க வேண்டும். கால்கள் மடித்து சுகாசனத்தில் இருப்பது நல்லது. இயலாதவர்கள் நாற்காலியின் இருந்தும் செய்யலாம். வெறும்தரையில் உடல் படும்படி இருக்ககூடாது. உடல் வலி ஏற்படுமானாம் அமரும் நிலையை மாற்றிக்கோள்ளலாம். 

கேள்வி பதில்: சாதனையின் போது உடை எப்படி இருக்க வேண்டும்?

1.     சாதனையின் போது உடை எப்படி இருக்க வேண்டும்?

தோய்த்துலர்ந்த ஆடை எதுவானாலும், உடலை துன்புறுத்தும் ஜீன்ஸ் போன்றவை உகந்தவை அல்ல. 

கேள்வி பதில்: சாதனைக்கு முன்னர் குளிப்பது அவசியமா?

1.     சாதனைக்கு முன்னர் குளிப்பது அவசியமா?

குளித்தல் என்றால் குளிர்வித்தல் என்று பொருள், கால நிலையும், உடல் நிலையும் கருத்தில் கொண்டு இது பற்றி நிர்ணயித்தல் வேண்டும். உடல் நலம் சரியில்லாத காலத்தில், குளிர் தேசத்தில் வசிப்பவர்கள் உடலை ஈரத்துணியால் சுத்தம் செய்து கொண்டு சாதனையை தொடரலாம்.

கேள்வி பதில்: நான் அதிகம் பயணம் செய்பன், இதனால் சாதனை செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு உங்கள் வழிகாட்டல் என்ன?

1.     நான் அதிகம் பயணம் செய்பவன், இதனால் சாதனை செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு உங்கள் வழிகாட்டல் என்ன?
 i.          பயணத்தின் போது ஜெபமாலையை எடுத்துச் செல்லுங்கள்.
ii. நீங்கள் செய்யும் அனைத்தையும் அதிகாலை எழுந்து நீராடி நீங்கள் பயணத்தின்போது தங்கும் இடத்தில் பயிற்சி செய்து விடுங்கள். எந்த மனத்தடங்கலும் இருக்க தேவையில்லை.

iii.          எமது எண்ணங்களே எமக்கு தடை! 

கேள்வி பதில்: சாதனையினை எப்படி தொடங்குவது?

1.     சாதனையினை எப்படி தொடங்குவது?
 i.          முதல் படி இந்த பிரசுரத்தை மூன்று தடவைகள் அமைதியாக சித்தத்தில் பதியும் படி மீண்டும் மீண்டும் படித்து புரிதலை ஏற்படுத்திக் கொள்வது.
 ii.          சாதனைக்கு தேவையான பொருட்களை சேகரித்துக்கொளவது (இந்த பிரசுரத்தின் பகுதி 03 இனை அச்சிட்டுக்கொள்வது, காயத்ரி படம், குருமண்டல நாமாவளி படம், தீர்த்தப்பாத்திரம், ஜெபமாலை, விளக்கு, ஆசனம் – தர்ப்பை பாய் அல்லது துணி விரிப்பு) 
iii.          தினசரி சாதனைக்குரிய இடத்தினை ஒதுக்கிக்கொள்வது – இது பூஜை அறையாக இருந்தால் சிறப்பு அல்லது வசதிக்கு ஏற்ப ஏற்படுத்திக்கொள்வது.
iv.          சாதனை தொடங்கு நாளினை நிர்ணயித்துக்கொள்வது – பொதுவாக வெள்ளிக்கிழமை காலை 0530 – 0700 மணிக்குள் தொடங்கலாம்.
v.          நீங்கள் சாதனை தொடங்கப்போகும் நாளை எமக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தருவது.
vi.          குறித்த தினத்தில் சாதனையை தொடங்குவது.
vii.          ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாதனை அறிக்கையை எமக்கு அனுப்பி வைப்பதும் உங்களது சந்தேகங்களுக்கு தெளிவு பெறுதலும். 

கேள்வி பதில்: ஜெபம் செய்வதற்கான முறைகள் என்ன?

1.     ஜெபம் செய்வதற்கான முறைகள் என்ன?
தினசரி 108 செய்பவகளாக இருந்தால் துளசி மணி மாலை அல்லது வெண்சந்தன மணி மாலை பயன்படுத்தவும். இல்லவிட்டால் கீழ்வரும் முறையில் உங்கள் கரங்களை பயன்படுத்தலாம்.
 








கேள்வி பதில்: பெண்கள் தமது மாதாந்திர நாட்களில் சாதனை செய்யலாமா?

1.     பெண்கள் தமது மாதாந்திர நாட்களில் சாதனை செய்யலாமா?

ஆம், இதில் தவறு எதுவும் இல்லை! குறித்த நாட்களில் உடல் அதிகம் வருத்தமடையக்கூடாது என்பதற்காகவே ஓய்வு. நீண்ட நேரம் உடலை உறுதியாக வைத்து சாதனை செய்ய கஷ்டம் என்பதால் குறித்த நாட்களில் உடலை மனதை வசதியாக ஓய்வாக வைத்துக்கொண்டு மானசீகமாக ஜெபம் செய்யலாம். அனுஷ்டானமாக செய்யும்போது குறித்த நாட்கள் ஜெபம் செய்யும் எண்ணிக்கையை கணக்கில் எடுக்ககூடாது.

கேள்வி பதில்: காயத்ரி பெண்கள் ஜெபிக்கலாமா?

1.     காயத்ரி பெண்கள் ஜெபிக்கலாமா?

தாராளமாக, பெண்களே தாயாக மனித சமுதாயத்தை உருவாக்குபவர்கள், அவர்கள் மனப்பிராண வலிமை பெற்றால் மனித சமூகம் உயர்வு பெறும். ஆகவே பெண்கள் தாராளமாக இந்தச் சாதனையினை செய்யலாம். வேதங்களில் மந்திர திருஷ்டாக்கள் எனும் ரிஷித்தன்மையுடைய பெண்கள் இருந்திருக்கிறார்கள். முற்காலத்தில் அனைவரும் காயத்ரி சாதனை செய்திருக்கிறார்கள்.

கேள்வி பதில்: காயத்ரி அனைவரும் ஜெபிக்கலாமா?

1.     காயத்ரி அனைவரும் ஜெபிக்கலாமா?

ஆம் தாராளமாக, எமது குருமார்கள் ஜாதி, மத, இன, ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உபதேசம் தந்துள்ளார்கள். காய்த்ரி பிரம்மோபதேசம் எனப்படுகிறது. பிரம்ம வித்தை அனைவருக்குமானது ஆகவே எந்த பேதமும் இல்லாமல் ஜெபிக்கலாம். இது எமது குரு வாக்கிய பிரமாணத்தின் பிரகாரம் உறுதி கூறுகிறோம். ஆகவே சித்த வித்யா குருமண்டலத்தை சரணடைந்து காயத்ரி ஜெபிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் எதுவித பயமோ, மனத்தடங்கலோ இன்றி சாதனையினை தொடங்கலாம். இந்த வித்தைகளுக்கும், சாதனைக்கும் அதிகாரிகளான ரிஷிகள் குருமண்டலத்தில் இருப்பதால் அவர்கள் எப்போதும் உங்களை சரியான வழியில் வழி நடாத்துவார்கள்.

கேள்வி பதில்: நான் மாமிச உணவு உண்பவன், இந்த சாதனையின் போது மாமிசம் உண்ணக்கூடாதா?

1.     நான் மாமிச உணவு உண்பவன், இந்த சாதனையின் போது மாமிசம் உண்ணக்கூடாதா?

உணவு மனதின் ஒருபாகமாக திரிகிறது. ஆகவே மனம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் உணவில் ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எனினும் ஆரம்பத்தில் இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொண்டு சாதனை செய்யாமல் இருப்பதைவிட எதுவித கட்டுபாடும் இன்றி சாதனையை தொடர எமது புத்தி எது சரியான உணவு எது பிழையான உணவு என்பதை எமக்கு காட்டும்.  அப்படி நாமாக அனுபவத்தில் உணர்ந்துகொள்ளும் விஷயத்தை கடைப்பிடிப்பதில் எமக்கு எந்த மனத்தடங்கலும் இருக்காது. ஆகவே இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாது சாதனையினை தொடருங்கள். 

கேள்வி பதில்: எனக்கு வேலை கிடைக்கவில்லை, வீட்டில் மனைவியுடன் பிரச்சனை, வியாபாரம் சரியில்லை இவற்றை தீரும் படி இந்த சாதனையின் பிரார்த்தனையில் கேட்கலாமா?

1.     எனக்கு வேலை கிடைக்கவில்லை, வீட்டில் மனைவியுடன் பிரச்சனை, வியாபாரம் சரியில்லை இவற்றை தீரும் படி இந்த சாதனையின் பிரார்த்தனையில் கேட்கலாமா?

இந்த சாதனையில் நாம் எமது மனதையும், உடலையும் பிராணனையும் வலுப்படுத்த தேவையான 16 பேறுகளை மட்டுமே கேட்கிறோம். இவை கிடைத்துவிட்ட பாவத்துடன் எமது மனதையும் புத்தியையும் உபயோகித்து எமது பிரச்சனைக்கு வழி காணவேண்டும். உதாரணமாக வியாபாரம் நஷ்டமடைந்து வருகிறது என்றால் இங்கு தரப்பட்டுள்ள சாதனையை கடைப்பிடித்துக்கொண்டு தினசரி வியபாரம் நஷ்டமடைகிறது என்று ஆராயவேண்டும். இப்படிச்செய்யும்போது எமது தெளிவடைந்த புத்தி அதற்குரிய உண்மையான காரணத்தை தெளிவாக காட்டும்.

கேள்வி பதில்: காயத்ரி சித்த சாதனை என்றால் என்ன?

1.     காயத்ரி சித்த சாதனை என்றால் என்ன?

எமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் எமது சித்தத்தில் பதிந்துள்ள பதிவுகள். பொதுவாக ஒருவர் இறை சாதனை செய்யும்போது அவர்களது பிராண நிலை வலுப்பெறுவதால் சித்தத்தில் உள்ள பதிவுகள் வெளிப்பட்டு அவர்களது வாழ்வு அவர்கள் பதிவித்த வினைகளுக்கு ஏற்றவாறு நன்மையோ தீமையே உண்டாகும். இதனாலேயே சிலர் நான் காயத்ரி சாதனை தொடங்கிய நாளிலிருந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று பயந்து விடுவார்கள். ஆகவே எமது சித்தத்தில் தெய்வீக எண்ணங்களையும் எமது வாழ்வுக்கு வேண்டிய பதிவுகளையும் பதிவித்து விட்டால் எமக்கு நன்மையே நடந்தேறும். ஆகவே இங்கு தரப்பட்டுள்ள சித்த சாதனையை தவறாமல் செய்து வரவேண்டும்.

கேள்வி பதில்: உலகத்திற்காக சங்கல்பித்தால் எனது நாளாந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?

1.     உலகத்திற்காக சங்கல்பித்தால் எனது நாளாந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கொப்ப உலகிற்காக செயல்புரியும் சாதகனின் தேவைகளை பிரபஞ்ச சக்தியும் குருமண்டலமும் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே சங்கல்பத்தில் உலக நன்மைக்காகவும், காயத்ரி சித்த சாதனையிலும், இறுதி பிரார்த்தனையில் பதினாறு பேறுகளை தரவும் பிரார்த்திக்கிறோம்.

கேள்வி பதில்: காயத்ரி சங்கல்பம் என ஏன் செய்யச்சொல்லுகிறீர்கள்?

1.     காயத்ரி சங்கல்பம் என ஏன் செய்யச்சொல்லுகிறீர்கள்?

எமது மன, பிராண சக்திகளை பிரயோசனமற்ற செயல்களில் ஈடுபடுத்தி வீணாக்க கூடாது. ஆகவே எமது காயத்ரி சாதனை எமக்கும் எம்மை அண்டி உள்ளவர்களுக்கு, உலகிற்கும் பயன்படவேண்டும் என்று சங்கல்பிக்கும் படி குருமண்டலத்தால் வழிகாட்டப்பட்டுள்ளது. 

கேள்வி பதில்: அகத்தியர் மூல குருமந்திரம் என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல சொல்லுகிறீர்கள்?

1.     அகத்தியர் மூல குருமந்திரம் என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல சொல்லுகிறீர்கள்?

எமது குரு பரம்பரையின் நேரடி வழிகாட்டல் மகா குரு ஸ்ரீ அகத்திய மகரிஷி. எம்மிடம் உபதேசம் பெற்று சாதனை செய்பர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பீஜ மந்திரங்கள் ஒருவரின் பிராண அதிர்வை ஆன்ம முன்னேற்றத்தின் வழியில் துரிதப்படுத்தும்.

கேள்வி பதில்: சித்த வித்யா குருமண்டல நாமாவளி என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல வேண்டும்?

1.     சித்த வித்யா குருமண்டல நாமாவளி என்றால் என்ன? ஏன் அதைச் சொல்ல வேண்டும்?

இது எம்மை வழி நடாத்தும் மகா காரண சரீரத்தில் சிரஞ்சீவியாக வாழும் குருமார்களை தொடர்புகொள்ளும் கடவுச் சொல் (password). இதை தொடர்ச்சியாக உச்சரிக்க அவர்களின் அருள் காந்த சக்தி உங்களில் சேர்ந்து உங்கள் மனதையும், புத்தியையும் வழி நடாத்தச் செய்யும்.

கேள்வி பதில்: காயத்ரி சாதனைக்கு தீக்ஷை அவசியமா?

1.     காயத்ரி சாதனைக்கு தீக்ஷை அவசியமா?


ஆம் அவசியம், தீக்ஷை என்பது தகுந்த குருவிடமிருந்து தெய்வ ஆற்றலைப்பெறுவது. நீங்கள் கற்கும் இந்த முறையில் சித்த வித்யா குருமண்டல நாமாவளியும், அகத்தியர் மூலகுரு மந்திரமும் அவசியமான சாதனைகள். 

2.     நீங்கள் தீக்ஷை அளிக்கிறீர்களா?
நாம் இங்கு உங்களுக்கு கற்பிக்கும் முறை எம்மை வழி நடாத்தும் குருமார்களின் வழிகாட்டலில் கூறப்பட்ட சாதனை முறை. இங்கு கூறப்பட்டுள்ள படிகளின் படி உங்கள் சாதனையினை செய்து வர உங்களில் தீக்ஷை எனும் தெய்வ சக்தி பரிமாற்றம் நிகழும். இதனை 45 நாட்கள் தொடர்ச்சியான சாதனையில் அனுபவப்பூர்வமாக அறியலாம். சித்த வித்யா குருமண்டல நாமாவளியும், அகத்தியர் மூல குரு மந்திர ஜெபமும் இதில் கூறப்பட்ட படிமுறையில் சாதனை செய்வது அவசியமான ஒன்றாகும். சாதனை தொடர்பான வழிகாட்டலை எம்மிடம் தாராளமாக பெறலாம். நாம் உங்களில் குருவினதும் இறை ஆற்றலை பெறுவதற்குமுரிய பக்குவத்தை ஏற்படுத்த உதவுகிறோம். அவ்வளவே!

கேள்வி பதில்: ஏன் காயத்ரி சாதனை செய்ய வேண்டும்?

ஏன் காயத்ரி சாதனை செய்ய வேண்டும்?

மனம் சலனிக்கும் இயல்புள்ளது, சலனத்தை கட்டுப்படுத்தும் மனதின் பகுதிக்கு புத்தி என்று பெயர். இந்த புத்தியை பரம்பொருளுடன் இணைத்தால் புத்தி பரம்பொருளின்பேரறிவுடன் இணைந்து செயற்படும். இப்படி இணைந்து செயற்படும்போது ஒருவன் தனது துன்பங்களுக்கு காரணமான மனம் தெய்வ குணமும் தெய்வ சக்தியும் பெற்று நல்வழியில் நடக்கும். இதனால் எமது வாழ்க்கை துன்பங்களை அகற்றி இன்ப வாழ்வு பெறும் வழியில் முன்னேறும்.

Friday, January 19, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 06: ஆன்மீக மூட நம்பிக்கைகள்

இந்த உலகில் பலவகை மூட நம்பிக்கைகள் காணப்படுகிறது. ஆண்கள் மட்டும்தான் சில தெய்வங்களை வணங்க வேண்டும், பெண்கள் வணங்ககூடாது. சில ஜாதியை சேர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் சிலர் தாழ்ந்தவரகள் என்ற எண்ணம். குணத்தளவே ஆகுமாம் குலம் என்று ஒருவனது மனப்பண்பே ஒருவனின் தகுதியை நிர்ணயிக்கும் என்று எமது முன்னோர்கள் வகுத்து வைத்திருக்க இன்று பலர் அறியாமையில் பல மூட நம்பிக்கை வளர்த்து திரிகிறார்கள்.

இப்படி ஆன்மீகத்திலும்  மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன. இறைவனின் நாமத்தை கூறிவிட்டால் முக்தி கிடைத்துவிடும், பூஜை செய்துவிட்டால் இறைவன் திருப்திப்பட்டு விடுவான், இப்படி திருப்தி பட்ட இறைவன் நாம் கேட்பதெல்லாம் தருவான் இப்படி பலர் மூட நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இடைக்காலத்தில் அரசர்களும் அதிகாரம் படைத்தவர்களும் தமது அதிகாரத்தையும் ஆடம்பரத்தையும் தாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டவும் உருவாக்கிய முறைகளே இன்று பெரும்பாலும் கோயில் பூஜை, திருவிழாக்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய எண்ணத்துடன் பூஜையை செய்யும் எவரும் அதற்கான பலனை பெறுவதில்லை.

உலகை படைத்து காத்து அழிக்கும் கடவுள் இத்தகைய சொற்ப அற்ப உபச்சாரங்களுக்கு மதி மயங்கும் ஆசாமியாகவா இருப்பார்? இப்படி நினைப்பது எவ்வளவு தவறு?  நேர்மையான ஒரு அதிகாரியையே இப்படி வளைக்க முடியாமல் இருக்கும்போது பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியை எப்படி பூஜைகளாலும், யாகங்களாலும் அடிமையாக்க, ஏமாற்ற முடியுமா?
அப்படியானால் இவை எல்லாம் எந்த பிரயோசனமும் அற்றவையா?


இல்லை! அதன் பொருளறிந்து, பலனறிந்து, குறித்த நோக்கத்தினை அடைவதற்காக செய்யப்படுபவை நிச்சயம் பலனளிக்கும். இன்றைய வெளிப்பகட்டு பூஜை, திருவிழா, வழிபாடுகளின் உண்மை வடிவம் உபாசனையும் சாதனையும் ஆகும்.

உபாசனையினதும் சாதனையினதும் உண்மை நோக்கம் தன்னை சுத்தி செய்துகொள்வதும் முன்னேற்றிக்கொள்வதுமாகும். தபம் என்பதும் எமது தீய பண்புகளை சுட்டெரித்தல் என்றும் யோகம் என்பது நல்ல பண்புகளை வளர்த்து பரமான்மாவுடன் இணைதல் என்றும் பார்த்தோம். ஆக ஒருவன் தனது அடிப்படை பண்புகளை வளர்த்துக்கொள்வதாலும் பக்தியாலும் மட்டுமே இறையருளுக்கு பாத்திரமாகலாமன்றி வெறுமனே பூஜை செய்வதாலும் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதாலும் அல்ல.


ஜெபம், தியானம், வழிபாடும், கூட்டுப்பிரார்த்தனை, பூஜை என்பவற்றின் உண்மை நோக்கம் மனிதனை கருணை, தர்ம சிந்தனை போன்ற நற்குணங்களை தம்முள் நிரந்தரமாக வளர்ப்பதற்காகவே அன்றி இறைவனை திருப்திப்படுத்த அல்ல. 

Thursday, January 18, 2018

ஆன்மீகம் என்றால் என்ன? 05: யோகமும் ஆன்மீகமும்

இன்று யோகா, யோகம் என்பது உலக பிரபலமான ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மன அழுத்ததிற்கும், சக்கரை நோய்க்கு, உடல் பருமனுக்கு என்று யோகா விளம்பரப்படுத்தப்படுகிறது. இதுவா யோகம்?

இல்லை!

யோகம் என்பது சமஸ்க்ருதத்தில் யுஜ் என்ற சொல்லில் இருந்து பரிணமித்த சொல். இந்த சொல்லின் பொருள் இணைதல். எதனுடன் இணைதல்? மனித உடலில் உணர்வு சக்தியாக இருக்கும் ஆன்மா அதன் உண்மை ஸ்வரூபமான பரமான்மாவுடன் இணைதலே யோகம்.
இது எப்படி சாத்தியம்?

ஒருவன் தன்னில் அந்த பரமான்மாவின் குணத்தை தன்னில் உருவாக்கி, அதை தினசரி செயலில் கொணர்ந்து, தனது பண்பாக மாற்றினால் மட்டுமே இந்த இணைவு சாத்தியம்.

ஆக நாம் யோகம் செய்கிறோம் என்று செய்யும் எல்லா பயிற்சிகளிலும் இது நடைபெறுகிறதா என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக ஒரு மனிதன் இறைவனைக்காண்கிறான் என்பது தன்னில் அந்த தெய்வத்தின் நற்குணங்களையும் தனது ஆளுமையில் அந்த பண்புகளையும் உருவாக்குகிறான் என்பதே அர்த்தம் அன்றி கற்பனை காட்சிகளை காண்பதோ, வேடங்கள் போட்டு தன்னை ஆன்மீகத்தில் உயர்ந்து விட்டதாக கற்பித்துக்கொள்வதோ அல்ல.

கடவுளின் எல்லையற்ற குணங்கள் அனைத்தையும் ஒருவன் தன்னில் உருவாக்கி கொள்வது என்பது உண்மையில் சாத்தியமற்றது. ஆகவே ஒருவன் விராட் பிரம்மம் என்ற கடவுளின் குணங்களும், பண்புகளும் நிறைந்த பிரபஞ்சத்தையும், நாம் வாழும் இந்த பூமியின் இயற்கையை விஸ்வ பிரம்மமாகவும், இவற்றிலும் தன்னிலும் ஓடும் உயிர்ப்பை ஜீவபிரம்மமாகவும் உணர்ந்து பழகுதலே யோகம்.

சுருக்கமாக யோகம் என்பது எமது நான் என்ற எண்ணத்தை விரிவடையச் செய்து பிரபஞ்சத்தில் உள்ளவற்றை தன்னில் ஒரு பாகமாக பார்க்கும் சரியான மனப்பாங்கினையும், தனக்கு மட்டும் செயல்புரியாமல் மற்றவர்களுக்காகவும் செயல்புரியும் பண்பினையும் உருவாக்கும் செயல்முறை என்பதே யோகத்தின் உண்மை விளக்கம்.


ஆன்மீகம் என்றால் என்ன? 04: ஆன்ம சாதனைக்குரிய வழிகள்


மனிதன் தனது உணர்வு சக்தியை மனதின் பிடியில் இருந்து விழிப்பித்தால் அதீத மன, பிராண, உடல் ஆற்றல்களை பெறலாம் என்பது ரிஷிகளின் சித்தர்களின் ஆன்ம விஞ்ஞானமாகும்.

மனமே உணர்வு சக்தியை ஈர்க்கும், செயற்படும் அலகு. இந்த மனம் அதிக சலனத்திற்கோ அல்லது புலன் வழி அதிகம் ஈர்க்கப்படும்போது அதன் மூலமாகிய உணர்வுடன் தொடர்பினை இழந்து விடுகிறது. இப்படி மனம் உணர்வை விட்டு விலகி குழம்பிய நிலையே துன்பம், குழப்பம் எனப்படுகிறது.

இது மனிதன் தனது மனத்தை இயற்கையின் விதிக்கு மாறாக பயன்படுத்துவதாலும், அசுர எண்ணங்களில் செலுத்துவதாலும் தனது ஆளுமையை தாழ்மைப்படுத்திக்கொள்வதால் ஏற்படுகிறது.

ஆக ஒருவன் தனது துன்பங்களில் இருந்து மீண்டு இன்ப வாழ்க்கை பெற விரும்புவன் தனது உணர்வு சக்தியின் பால் மனதை திருப்ப வேண்டும். இதற்கு முதலில் மனதை தூய்மைப்படுத்த வேண்டும். இரும்பில் துருப்பிடித்திருந்தால் அதை நீக்குவதற்கு அதை அக்னியில் சூடாக்கவேண்டும், அல்லாவிடில் அமிலத்தால் எரிக்க வேண்டும். இதுபோல் மனம் அழுக்கடைந்திருந்தால் மனதை தபஸ் எனும் அக்னியில் சூடாக்க வேண்டும்.
தபஸ் என்றாலே சூடாக்கல் என்றே பொருள். மனதில் உள்ள வேண்டாத எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், மனப்பாங்கு (attitude) போன்றவற்றை நீக்கி மனதை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவந்து ஒரு இலக்கில் நிறுத்துவது தபஸ் எனப்படும்.
புறத்தில் எதிரி என்று தெளிவாக தெரிந்த ஒருவனுக்கு எதிரியை சமாளிப்பது எளிது. ஆனால் தன்னுடன் கூட இருக்கும் எதிரியை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுபோல் மனதில் இருக்கும் தமது குறைகள் எளிதாக குறைகளாக தெரியாது. அவை எமது இயல்பான நல்ல குணங்களாகவே எமக்கு பிரதிபலிக்கும். ஆகவே எது சரியான எண்ணம் செயல் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு துணிதுவைப்பவன் (முற்காலத்தில்) செய்யும் செயல் முறை போன்றது இது. துணியை முதலில் வெள்ளாவி கட்டி, பின்னர் சவர்க்காரம் போட்டு, பின்னர் நன்கு தேய்த்து, பிறகு அடித்து துவைத்து பின்னர் சுத்தமான நீரில் கழுவி வாசனை திரவியம் இடல் போன்றதே தபஸ்.
இது வெறுமனே உடலை முள்ளால் தைத்து, நெருப்பில் துன்புறுத்தி உடலை துன்புறுத்துவதல்ல தபஸ். தபஸில் நான் கு படிகள் இருக்கிறது.

  1. புலன்கள் வழி செல்லுதலை தடுத்தல், கட்டுப்படுத்தல், அளவுடன் பயன்படுத்தல்.
  2. நேரத்தை ஒழுங்காகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தல்.      
  3. பணத்தை நேர்மையாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்தல்
  4. சிந்தனையின் போது எண்ணங்கள் எப்போதும் ஆக்கபூர்வமாகவும், வேண்டாத விஷங்களைப் பற்றிய வீண் சிந்தனை இல்லாமலும் மனதை வைத்துக்கொள்ளுதல்.


எமது ஐம்புலன்களும் இன்பத்தையும், இயக்கத்தை விரும்புவது, நேரத்தை எப்படி எதில் பயன்படுத்துகிறோம், வளங்களையும், பணத்தையும், மனதையும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே எமது உலக வாழ்க்கை. ஆகவே இந்த நான் கு விஷயத்திலும் ஒரு ஓழுங்கைக்கொண்டு வருவதன் மூலம் ஒருவன் தனது வாழ்வை கட்டுப்பாட்டிற்குள் கோண்டு வரமுடியும்.

இங்கு பலரும் தம்மை குழப்பி சோர்ந்து போகும் விஷயம் “கட்டுப்படுத்தி அளவாக தமது புலன் களை பயன்படுத்துதலுக்கும், புலன் இன்பங்களை அடக்கி ஒதுக்கி இருப்பதற்குமிடையிலான வேறுபாடு.

இன்று ஆன்மீக வாழ்க்கை என்று தமது குடும்பத்தில் இன்பத்தை சிதைத்தவர்கள் பலர். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் இயல்பான வாழ்க்கை ஆன்மீக வாழ்விற்கு தடை என்று மயங்கி தமது குடும்ப உறவை சிதைத்தவர்கள் பலர். கிருகஸ்த அசிரமத்தில் இருந்துகொண்டு தபஸை செய்யும் எந்த சாதகரும் தமது ஆசிரமத்திற்கு உகந்த தர்மத்தை சரிவர செய்வதால் மட்டுமே ஆன்ம முன்னேற்றம் பெறமுடியும்.

ஆகவே சாதனை, ஆன்மீக, தபஸ் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் உடனே காவி கட்டுதல், ருத்திராக்ஷம் போடுதல், வேஷங்களை போட்டு தம்மை உலகில் இருந்து மாறுபட்ட கோமாளிகளாக காட்டிக்கொள்ளுதல் என்பவை உண்மை ஆன்மீகம் அல்ல. தமக்கு கர்மத்தினால் அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தமது அகத்தினை/மனதை புடம் போட்டு வாழ்வினை செம்மைப்படுத்துவதே உண்மை ஆன்மீகம்.


ஆன்மீகம் என்பது ஒருவன் தனது மனம், புலன்கள், செல்வம், நேரம் ஆகிய நான் கினையும் சரியான வழியில் ஒழுங்குபடுத்தி தனது உணர்வு சக்தியின் ஆற்றலை தன்னில் விழிப்பிக்கும் செயல்முறை. இதுவே ரிஷிகளும் சித்தர்களும் அனுபவ பூர்வமாக செயல்கொண்ட முறை. 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...